சீனாவில் சிறிய மாடுலர் அணு உலையின் குளிர்நிலை செயல்பாட்டு சோதனை நிறைவேற்றம்

சீனாவின் ஹைனான் மாகாணத்தில், உலகின் முதலாவது நில அடிப்படையிலான சிறிய மாடுலர் அணு உலையான லிங்லாங்-ஒன்று, குளிர்நிலையில் நடந்த செயல்பாட்டுச் சோதனையை கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இது, அணு உலையில் எரிபொருள் நிரப்புதல் மற்றும் வணிக ரீதியிலான செயல்பாட்டை நோக்கிய முக்கியமான முன்னேற்றத்தைக் குறிப்பதாக இதனைத் தயாரித்த சீன தேசிய அணு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த மைல்கல் சாதனை, சோதனையின் அடுத்த கட்டங்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துத் தந்துள்ளது. குளிர் சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை, அணு உலையின் முதலாவது விரிவான உடற்சோதனை போன்றதாகும். இதன் மூலம் அணு உலையின் பாதுகாப்பு மற்றும் நிலையான செயல்திறனை உறுதி செய்துள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிங்லாங்-ஒன்று என்ற சிறிய அணு உலை , உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. முதலாவது நில அடிப்படையிலான வணிகப் பயன்பாட்டிற்கான சிறிய மாடுலர் அணு உலையான இது, சர்வதேச அணு ஆற்றல் முகமையின் பாதுகாப்பு பரிசீலனையில் தேர்ச்சி பெற்றது.

இது இயக்கத்துக்கு வரும்பட்சத்தில், ஆண்டுதோறும் 1 பில்லியின் கிலோவாட்ஸ்-மணி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, ஹைனானில் உள்ள 5 லட்சத்து 26ஆயிரம் குடும்பங்களின் மின்தேவையைப் பூர்த்தி செய்யும். அத்துடன், ஆண்டுக்கு தோராயமாக 8.8 லட்சம் டன் கார்பன்டை ஆக்சைடு உமிழ்வைக் குறைக்கும். இது 7.5 மில்லியன் மரங்கள் நடுவதற்குச் சமம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author