ஈரானைச் சுற்றி இத்தனை நாடுகளா? வியக்க வைக்கும் புவியியல் ரகசியம்..

Estimated read time 0 min read

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள ஈரான், அதன் வரலாறு மற்றும் புவியியல் முக்கியத்துவம் காரணமாக உலக அளவில் எப்போதும் கவனிக்கப்படும் நாடாக உள்ளது. நிலப்பரப்பின் அடிப்படையில் ஈரான் மொத்தம் ஏழு நாடுகளுடன் தனது எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.

ஈராக், துருக்கி, அஜர்பைஜான், ஆர்மீனியா, துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகியவையே அந்த நாடுகள் ஆகும். இது தவிர, ஈரானின் தெற்குப் பகுதியில் பாரசீக வளைகுடாவும் ஓமான் வளைகுடாவும் கடல் எல்லைகளாக அமைந்துள்ளன.

கடல்வழிப் போக்குவரத்தில் ஈரான் மிகுந்த வலிமை வாய்ந்தது; குறிப்பாக ஹோர்முஸ் ஜலசந்தி மீதான அதன் கட்டுப்பாடு உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான வான்வழித் தூரம் சுமார் 2500 முதல் 2700 கிலோமீட்டர்கள் ஆகும்.

டெல்லியிலிருந்து விமானம் மூலம் வெறும் 3 முதல் 4 மணி நேரத்திலேயே ஈரானின் தலைநகரான தெஹ்ரானைச் சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author