“தாய்க்கிழவிக்கு தேசிய விருது உறுதி” பாரதிராஜா சொன்ன அந்த வார்த்தை…. மகிழ்ச்சி வெள்ளத்தில் ராதிகா….!! 

Estimated read time 1 min read

சினிமா உலகின் ஜாம்பவான் இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சந்தித்த நடிகை ராதிகா சரத்குமார், அவர் நடித்த ‘தாய்க்கிழவி’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்று ஆர்வத்துடன் கேட்டறிந்தார்.

படத்தைப் பார்த்த பாரதிராஜா, ராதிகாவின் அபாரமான நடிப்பைப் பாராட்டித் தள்ளியதோடு, “படம் சூப்பராக இருக்கிறது, நிச்சயமாக ராதிகாவிற்கு இந்தப் படத்திற்காகத் தேசிய விருது கிடைக்கும்” என்று ஆணித்தரமாகக் கூறினார். குருவின் வாயால் கிடைத்த இந்தப் பாராட்டு ராதிகாவை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

இயக்குனர் இமயத்தின் வாழ்த்தைக் கேட்டு நெகிழ்ந்த ராதிகா, “உங்கள் வார்த்தை பலிக்கட்டும் சார்.. அப்படி விருது கிடைத்தால், அதை உங்கள் காலடியில் கொண்டு வந்து வைத்து விடுகிறேன்” என்று உணர்ச்சிப்பொங்கக் கூறினார். இவர்களின் இந்த அழகான குரு-சீடர் சந்திப்பு மற்றும் ராதிகாவின் இந்தப் பணிவான பதில் அடங்கிய காணொளி தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வருகிறது. பாரதிராஜாவின் அந்த “தேசிய விருது” கணிப்பு இப்போது கோலிவுட் வட்டாரத்தில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author