இதுவே கடைசி எச்சரிக்கை! ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்காவிட்டால் எண்ணெய் கிணறுகள் தரைமட்டமாகும்: ட்ரம்ப்  

Estimated read time 1 min read

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும், தவறினால் அந்நாட்டின் எண்ணெய் கிணறுகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், ஈரானின் தற்போதைய புதிய தலைமையுடன் பேச்சுவார்த்தையில் “முக்கிய முன்னேற்றம்” ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தி தடையின்றி கப்பல் போக்குவரத்திற்குத் திறக்கப்பட வேண்டும், உடன்படிக்கை எட்டப்படாவிட்டால், ஈரானின் எண்ணெய் கிணறுகள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றை அமெரிக்கா “தரைமட்டமாக்கும்” என எச்சரித்துள்ளார்.

You May Also Like

More From Author