ஜுலை 20, 21ம் நாட்களில், பாலஸ்தீன ஹமாஸ் மற்றும் ஃபத்தாஹ் அமைப்பின் உயர்நிலை தலைவர்கள் பெய்ஜிங்கில் நல்லிணக்கப் பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியேன் கூறுகையில், பாலஸ்தீனத்தின் பல்வேறு பிரிவுகளும், பேச்சுவார்த்தை மூலம் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை நனவாக்குவதற்கு சீனா ஆதரவு அளித்து வருகிறது.
இத்தகைய பேச்சுவார்த்தைக்கு மேடைகளையும் வாய்ப்புகளையும் வழங்க சீனா விரும்புகிறது. பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, தொடர்பை வலுப்படுத்தி, பாலஸ்தீன உள்புற நல்லிணக்க இலக்கின் நனவாக்கத்துக்குக் கூட்டாக முயற்சி மேற்கொள்ள சீனா விரும்புகிறது. தொடர்புடைய பேச்சுவார்த்தை குறித்து, செய்திகள் இருந்தால், அவற்றை உரிய நேரத்தில் வெளியிடுவோம் என்று தெரிவித்தார்.