மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் செப். 1 முதல் வகுப்புகள் செயல்படும்

Estimated read time 0 min read

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வரும் செப். 01 முதல் வகுப்புகள் வழக்கமாக செயல்படும் என துணை வேந்தர் அறிவித்துள்ளார்.

நெல்லை அபிஷேகப்பட்டி பகுதியில் மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்படுகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் நான்கு மாவட்டங்களிலும் 106 கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2 ஆயிரத்திற்கும் மேலான மாணவ மாணவிகள் பல்வேறு 25க்கும் பாடப்பிரிவுகளில் படிக்கின்றனர். இந்த நிலையில் முதலாம் ஆண்டு வரலாறு படிக்கும் மாணவர்களுக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் பைக் பார்க்கிங் செய்வதில் நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முதலாம் ஆண்டு படிக்கும் 18 வயதான மணி மூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த மாணவரை 2ம் ஆண்டு மாணவர்கள் சிலர் தாக்கியதாக தாக்கினர். மாறி மாறி இருவரும் தாக்கிய நிலையில் மணி மூர்த்தீஸ்வரத்தைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர் காயமடைந்தார். அவரை சக மாணவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிற நிலையில் பேட்டை காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த நிலையில் மனோன்மணிய சுந்தரனார் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் காவல்துறையினரிடம் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து மோதல் தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மாணவர்கள் மோதலைத் தொடர்ந்து தற்போது இருந்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 24 பாடப் பிரிவுகளில் படிக்கும் 2000 க்கும் மேலான மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணை வேந்தர் சந்திரசேகர் அறிவித்த நிலையில், தற்போது வரும் செப். 01 முதல் வகுப்புகள் வழக்கமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author