சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் அண்மையில் சேவை துறையின் வளர்ச்சி குறித்து முக்கிய உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், தொழில் துறையின் மேம்பாட்டை ஆதரிப்பது, மக்களின் வாழ்வாதாரத்தின் தேவையை நிறைவு செய்வது, வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்துவது உள்ளிட்ட துறைகளில் சீனாவின் சேவைத் தொழில் முக்கிய பங்காற்றியுள்ளது என்றார்.
மேலும், புதிய காலத்தில் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச சிந்தனையை வழிக்காட்டலாகக் கொண்டு, புதிய வளர்ச்சிக் கருத்துக்களைச் சரியாகவும் பன்முகங்களிலும் செயல்படுத்தி, உற்பத்தி சார்ந்த சேவைத் தொழிலை, மதிப்பு சங்கிலியின் உயர்நிலையை நோக்கி முன்னெடுத்து, சேவைத் துறையின் உயர்தர வளர்ச்சியின் புதிய நிலைமையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சீனாவின் சேவைத் துறை மாநாடு ஏப்ரல் 7, 8ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் நடைபெற்றது. ஷி ச்சின்பிங்கின் முக்கிய உரை இம்மாநாட்டில் கேட்டறியப்பட்டது. சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் இம்மாநாட்டில் பங்கெடுத்து உரை நிகழ்த்தினார். துணைத் தலைமையமைச்சர் டிங் சுவெஷியாங் முடிவுரை நிகழ்த்தினார்.
