சீன-ரஷிய தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு நல்வாத்துக்கள்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் ரஷிய அரசுத் தலைவர் புதின் 2024ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் நாளில், ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பினர்.

சீன அரசு மற்றும் மக்களின் சார்பில், புதின் மற்றும் ரஷிய மக்களுக்கு இனிமையான நல்வாழ்த்துக்களை ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

ஷிச்சின்பிங் கூறுகையில்,

2024ஆம் ஆண்டு, சீன-ரஷிய தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும். இது இரு நாட்டுறவுக்கான புதிய, முக்கிய மைல் கல்லாகும். 2025ஆம் ஆண்டு, சீனாவின் 14வது ஐந்தாண்டுத் திட்டக்காலத்தின் இறுதியான ஆண்டாகும். அதுவும், உலக மக்களின் பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றி பெறுவதற்கான 80ஆவது ஆண்டு நிறைவாகும். சீனா மற்றும் ரஷியாவின் பல்வேறு துறைகளிலுள்ள ஒத்துழைப்புகள் தொடர்ந்து புதிய வளர்ச்சி வாய்ப்புக்களை எதிர்நோக்கும் என்றார் அவர்.

ஷிச்சின்பிங்கிற்கு புதின் இனிமையான புத்தாண்டு மற்றும் வசந்த விழாவின் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சீன மக்கள் இன்பமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

ஒரே நாளில், சீன தலைமையமைச்சர் லீச்சியாங், ரஷிய தலைமையமைச்சர் முசுஸ்டின் ஆகியோரும் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author