சீனா சொந்தமாக உருவாக்கியுள்ள 15 மெகாவாட் திறன் கொண்ட கனரக எரிவாயு விசையாழியின் சோதனை நவம்பர் 25ஆம் நாள் சீனாவின் தேயாங் நகரில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. சிறிய வடிவிலான கனரக எரிவாயு விசையாழியின் ஆராய்ச்சியில் சீனா முன்னேற்றம் பெற்றுள்ளதை இந்த சோதனை எடுத்துக்காட்டுகிறது.
இதற்கு முன்பு, தொங்ஃபாங் எலெக்ட்ரிக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 50 மெகாவாட் நிலை கனரக எரிவாயு விசையாழி தற்போது வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 50 மெகாவாட் விசையாழியை விட 15 மெகாவாட் விசையாழி மேலும் சிறியதாகும். 5.7 மீட்டர் நீளமும் 2.3 மீட்டர் அலகமும் 2.7 மீட்டர் உயரமும் கொண்ட இந்த விசையாழியானது, 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகங்களால் உருவாக்கப்படும்.
இதன் மூலம் ஒரு மணிநேரத்தில் 22ஆயிரம் கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட முடியும். இது, ஒரு நாளைக்கு 2500 வீடுகளுக்கு மின் விநியோகம் வழங்கப் போதுமானது.
கனரக எரிவாயு விசையாழி என்பது, ஒரு நாட்டின் தொழிற்துறையில் மிக உயர்ந்த நிலை அடையாளச் சின்னங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.