சமீபத்திய ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் அணி தரவரிசையில் 10வது இடத்திற்கு சரிந்ததால், 2027 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைக்கான பாதையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பெரும் பின்னடைவை எதிர்கொள்கிறது.
இந்த வீழ்ச்சி, நேரடி தகுதிக்கு தேவையான முதல் எட்டு இடங்களிலிருந்து அவர்களை வெளியேற்றுகிறது, இது 2023 பதிப்பைப் போலவே அடுத்த ஒருநாள் உலகக்கோப்பையையும் வெஸ்ட் இண்டீஸ் அணி தவற விடலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, கொழும்புவில் இலங்கையை எதிர்த்து சமீபத்தில் நடந்த போட்டியில் வங்கதேசம் வென்றது, இரண்டு முறை உலகக் கோப்பை சாம்பியன்களான வெஸ்ட் இண்டீசிற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசம் 78 புள்ளிகளுடன் 9வது இடத்திற்கு முன்னேறி, 77 புள்ளிகளுடன் வெஸ்ட் இண்டீசை முந்திச் சென்றது.
2027 ஒருநாள் உலகக்கோப்பை வாய்ப்பையும் இழக்கிறதா வெஸ்ட் இண்டீஸ்?
