சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ ஏப்ரல் 9ஆம் நாள், வட கொரியாவில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சோ சோன்-ஹுய் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது வாங்யீ கூறுகையில்,
சீனா மற்றும் வட கொரியா தூதாண்மை உறவில் கடந்த ஆண்டு சாதனை புரிந்துள்ளது. இவ்வாண்டு, சீன-வட கொரிய நட்பார்ந்த ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர உதவி ஒப்பந்தம் நிறுவப்பட்ட 65ஆவது நிறைவு ஆண்டாகும். கடந்த 65 ஆண்டுகளாக, சீனாவும் வட கொரியாவும் நல்ல அண்டை நாடுகளாகவும், நல்ல நண்பர்களாகவும் விளங்கி வருகின்றன. இரு தரப்பும் எப்போதும் ஒன்றுக்கு ஒன்று மதிப்பளித்து ஆதரவளித்து, பிராந்திய மற்றும் உலகின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காப்பதற்கும் தத்தமது வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் இடைவிடாமல் முயற்சி செய்து வருகின்றன என்றார்.
சோ சோன்-ஹுய் கூறுகையில்,
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், இரு கட்சிகள் மற்றும் நாடுகளின் அதி உயர் தலைவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தையை நடத்தினர். இது, இரு கட்சிகள் மற்றும் நாடுகளின் நட்புறவு மற்றும் கூட்டு நம்பிக்கையைப் பெரிதும் வலுப்படுத்தி, வட கொரிய-சீன உறவின் வளர்ச்சிக்கு தெளிவான திசையை வழிகாட்டுகிறது. மேலும், இரு தருப்பினரும் தற்போதைய சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிகொண்டனர்.
