மகளிருக்கான 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறவுள்ளது.
இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் நடப்பு சாம்பியனான நியூசிலாந்து உள்ளிட்ட 12 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. ஜூன் 12-ஆம் தேதி பர்மிங்காமில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன.
இந்தத் தொடருக்கான மொத்த பரிசுத் தொகையாக சுமார் 82 கோடி ரூபாயை ஐசிசி அறிவித்துள்ளது. இது கடந்த 2024-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தொகையை விட 10 சதவீதம் அதிகமாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 21.5 கோடி ரூபாயும், இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு 11 கோடி ரூபாயும் பரிசாக வழங்கப்படும்.
மேலும், அரை இறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு தலா 6.30 கோடி ரூபாயும், போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்கும் குறைந்தபட்சமாக தலா 2.5 கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளது.
