ஆப்கான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒரு போட்டி மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் என மொத்தம் மூன்று டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதற்கான 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இலங்கையில் அந்த அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி விளையாட உள்ளது.
இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு அங்கமாக விளையாடப்படுகிறது. இதற்கு முன்னதாக ஆப்கான் அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் இந்தியாவில் நொய்டாவில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி விளையாட உள்ளது.
இந்த மூன்று போட்டிகளுக்கும் நியூசிலாந்து அணியின் கேப்டனாக டிம் சவுத்தி செயல்படுவார்.