நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை மசோதா தென்மாநிலங்களைப் பெரிதும் பாதிக்கும் என்றும், இது தென்னகத்தை வஞ்சிக்கும் நோக்கில் கொண்டுவரப்படுவதாகவும் திமுக எம்.பி. திருச்சி சிவா டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென்மாநிலங்களைத் தண்டிக்கும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளதாக அவர் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தமிழ்நாட்டிற்கு வெறும் 48 இடங்கள் மட்டுமே கிடைக்கும் நிலை உருவாகும் என அவர் எச்சரித்துள்ளார். இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்றும், மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் இந்த நடவடிக்கையைத் திமுக கடுமையாக எதிர்க்கும் என்றும் அவர் தனது பேட்டியில் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
