“தேசியவாதம் பற்றி எங்களுக்குத் தெரியாதா?”… பாஜக எம்.பி.க்கு ‘வரலாற்றுப் பாடம்’ எடுத்த ஆ.ராசா… வாயடைத்துப் போன நாடாளுமன்றம்..!!! 

Estimated read time 1 min read

மக்களவையில் தொகுதி மறுவரையறை குறித்த விவாதத்தின் போது, திமுக பிரிவினைவாதம் பேசுவதாக பாஜாக எம்.பி. தேஜஸ்வி சூர்யா முன்வைத்த குற்றச்சாட்டுக்கு திமுக எம்.பி. ஆ.ராசா மிகத்தெளிவான பதிலடி கொடுத்துள்ளார். தேசபக்தி மற்றும் தேசியவாதம் குறித்து பாஜகவினர் தங்களுக்குப் பாடம் எடுக்கத் தேவையில்லை என்று குறிப்பிட்ட அவர், நாட்டின் பாதுகாப்புச் சூழல்களில் தமிழகம் ஆற்றிய பங்களிப்பை வரலாற்றுச் சான்றுகளுடன் சுட்டிக்காட்டினார்.

இது குறிப்பாக, 1971-ம் ஆண்டு பாகிஸ்தான் போரின் போது மற்ற மாநிலங்களை விட அதிகமாக தமிழகம் 6 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியதையும், 1999 கார்கில் போரின் போது அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி 100 கோடி ரூபாயை வாஜ்பாய் அரசிடம் வழங்கியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

மேலும் பேசிய ஆ.ராசா, திமுக ஒருபோதும் நாட்டைப் பிரிக்க நினைப்பதில்லை என்றும், மாநில சுயாட்சியை மதிக்காமல் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளைத் திணிக்க முயற்சிக்கும் போது மட்டுமே, தங்கள் அடையாளத்தைப் பாதுகாக்க குரல் கொடுப்பதாகவும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதனால் கூட்டாட்சித் தத்துவத்தைப் போற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி அவர் ஆற்றிய இந்த ஆவேசமான உரை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாட்டின் ஒருமைப்பாட்டைப் பேணுவதில் திமுகவின் அர்ப்பணிப்பை இந்த உரை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author