தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்தது!

Estimated read time 1 min read

சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 17) அதிரடியாகக் குறைந்துள்ளது.

இதனால் நகைப் பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,200 குறைந்துள்ளது.

இதனால் ஒரு கிராம் தங்கம் ரூ.150 குறைந்து ரூ.14,210-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,680-க்கும் விற்பனையாகிறது.நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.14,360-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,14,880-க்கும் விற்கப்பட்டது. இன்று மீண்டும் கணிசமான அளவில் குறைந்துள்ளது.

அதேபோல், 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.11,860-க்கும், சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.94,880-க்கும் விற்பனையாகிறது.வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கும், ஒரு கிலோ ரூ.2,75,000-க்கும் விற்பனையாகிறது.

ஏப்ரல் மாதம் முழுவதும் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த விலை இன்று திடீரென குறைந்துள்ளது. உலக சந்தை நிலவரம், அமெரிக்க டாலர் மதிப்பு மற்றும் புவியியல் அரசியல் பதற்றங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து மாறுபாட்டுக்கு உள்ளாகி வருவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.தங்கம் மற்றும் வெள்ளி விலை தினசரி அடிப்படையில் மாறுபடுவதால், நகை வாங்குவதற்கு முன் சமீபத்திய விலை நிலவரத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author