நாடாளுமன்றத்தையே அதிரவைத்த கனிமொழியின் கேள்வி…!!! 

Estimated read time 1 min read

மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா குறித்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, மத்திய அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பொதுவெளியில் அளிக்கும் வாக்குறுதிகளுக்கும், மசோதாவில் உள்ள அம்சங்களுக்கும் இடையே பெரும் முரண்பாடு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இது குறிப்பாக, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்குத் தண்டனை வழங்கும் விதமாக இந்த மசோதா அமைந்துள்ளதாகவும், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையும் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.

மேலும், மாநில அரசுகளுடன் முறையான ஆலோசனைகளை மேற்கொள்ளாமல் தொகுதி மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கொண்டு வருவது இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கும் செயல் என்று கனிமொழி விமர்சித்தார்.

இதனால் “உள்துறை அமைச்சர் 50 சதவீத தொகுதிகள் உயரும் என்று கூறுகிறார், ஆனால் மசோதாவின் பிரிவு 4-ல் 2011 சென்செஸ் அடிப்படையில் தொகுதிகள் தீர்மானிக்கப்படும் என்றுள்ளது இது தமிழகம் போன்ற மாநிலங்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்று குறிப்பிட்ட அவர், மகளிர் இடஒதுக்கீட்டைத் தற்போதைய எண்ணிக்கையிலேயே அமல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author