நமீபிய வெளியுறவு அமைச்சர் முசாவேயுடன் வாங் யீ பேச்சுவார்த்தை

Estimated read time 1 min read

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, 17ஆம் நாள் பெய்ஜிங்கில் நமீபிய வெளியுறவு அமைச்சர் முசாவேயுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது வாங் யீ கூறுகையில்,

சீன-நமீபிய ஒத்துழைப்புகளை வளர்ப்பது இரு நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்குப் பொருந்தியது. நமீபியாவுடன் இணைந்து, இரு நாட்டு தலைவர்களின் பொது கருத்துகளை நடைமுறைப்படுத்தி, நெடுநோக்கு இணைப்பை முன்னேற்றி, சீனாவின் சுங்க வரி இல்லாத கொள்கையைப் பயன்படுத்தி, வேளாண், பொது மக்கள் இணைப்பு, இளைஞர் ஆகிய துறைகளிலுள்ள திட்டப்பணிகளை வளர்க்க சீனா விரும்புகின்றது என்றார்.

You May Also Like

More From Author