தொகுதி மறுவரையறை மசோதா – தோல்வி ஏன்?

Estimated read time 1 min read
தொகுதி மறுவரையறை மசோதா (delimitation bill) தோல்வியுறும் என்பது ஓரளவு எதிர்பார்த்ததுதான். தற்போதைய மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை (காலியிடங்கள் நீங்கலாக) 540.

சாதாரண மசோதாக்களை நிறைவைற்ற நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை போதுமானது. அதற்கு 271 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தாலே போதும்.
ஆனால், அரசியலமைப்பின் அடிப்படைத் தேர்தல் கட்டமைப்பில் செய்யப்படும் திருத்தங்கள் போன்ற முக்கியமான மாற்றங்களை செய்வதற்கான மசோதாக்களை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
Delimitaion bill தேர்தல் அமைப்பின் அடிப்படையை மாற்றக்கூடியது.
ஆகவே தற்போதைய மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில், மூன்றில் இரண்டு பங்கு ஆதரவைப் பெறுவதற்கு 360 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
ஆளும் NDA கூட்டணியிலோ 294 உறுப்பினர்களே உள்ளனர்.

மக்கள் அவையில்

என்டிஏவின் பலம் ;

பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 240

தெலுங்கு தேசம் கட்சி (TDP) 16

ஜனதா தளம் (ஐக்கிய) [ஜேடி(யு)] 12

சிவசேனா (SHS) 7

லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 5

JD(S), ஜன் சூராஜ் கட்சி (JSP), RLD

தலா 2 வீதம் (6)

AD(S), AGP, AJSU, HAM(S), NCP, SKM

தலா 1 வீதம் (6)

ஒருங்கிணைந்த சுயேச்சைகள் 2

இம்மசோதாவை நிறைவைற்ற NDA கூட்டணிக்கு கூடுதலாக 66 வாக்குகள் தேவைப்பட்டன. இந்தியா கூட்டணியில் சேராமல் நடுநிலை வகிப்பவர்கள் 12 பேர். இவற்றையெல்லாம் சேர்த்தால்கூட 306 வாக்குகள் மட்டுமே கிடைக்கும் சூழல் .
ஆனால், இந்த மசோதாவுக்கு கிடைத்த ஆதரவு 298 வாக்குகள் மட்டுமே. பொதுவாக இதுபோன்ற சமயங்களில் நடுநிலை வகிக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கூட இம்முறை ஆதரிக்கவில்லை எனத் தோன்றுகிறது.
ஏனெனில் இந்தத் தொகுதி மறுசீரமைப்பு மசோதா, பிஜேபியை தவிர்த்து மற்ற எல்லாக் கட்சிகளின் அடிமடியிலும் கைவைக்கக் கூடியது.
இது வெறும் தொகுதிகளின் நம்பர் விளையாட்டு மட்டும் அல்ல.
தொகுதிகளின் எல்லைக்கோடுகள் மாறுவதால், ஓபிசி, தலித்துகள், பழங்குடிகள் ஆகியோரின் வாக்கு அதிகாரத்தில் கைவைக்கக் கூடியது.
அதனால்தான் ராகுல்காந்தி இந்த மசோதாவை ‘ஓபிஸி மக்களின் ஹிஸ்ஸா சோரி’ (ஓபிசிகளின் உரிமைத் திருட்டு) என்கிறார்.
இன்று நாடு ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பியிருப்பதற்கு காரணம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்.
இம்மசோதா நாட்டின் அடிப்படைத் தேர்தல் கட்டமைப்பையே மாற்ற முற்படுவதால், இதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இரட்டைப் பூட்டு (double lock) பெரும்பான்மை தேவைப்படுகிறது.
குறிப்பிடத்தக்க அளவு ஒருமித்த கருத்து இல்லாமல், ஆளும் கட்சியின் எளிய பெரும்பான்மையால் மட்டும் இத்தகு மசோதாக்களை நிறைவேற்ற முடியாது என்பதை இந்த ‘இரட்டைப் பூட்டு’ உறுதி செய்கிறது.
இதனால்தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது தீராத எரிச்சல் பாஜக அரசுக்கு எப்போதும் இருந்து வருகிறது.

– நன்றி: கரிகாலன்

Please follow and like us:

You May Also Like

More From Author