கழிவறையில் இருந்து வந்ததும் கடந்த காலத்தை மறந்த பெண்.. ஹாங்காங்கில் நடந்த அந்த விசித்திர சம்பவம்..!! 

Estimated read time 0 min read

ஹாங்காங்கில் ஒரு பெண்ணுக்கு மலச்சிக்கல் காரணமாக ஏற்பட்ட விசித்திரமான நினைவாற்றல் இழப்பு சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பல நாட்களாக மலச்சிக்கலால் அவதிப்பட்டு வந்த அந்தப் பெண், ஒருநாள் கழிவறையில் மலம் கழிக்க அதிகப்படியாக முக்கியபோது, திடீரென அவரது நினைவாற்றல் பாதிக்கப்பட்டது.

கழிவறையை விட்டு வெளியே வந்த அவருக்கு, கடந்த 10 ஆண்டுகளில் தனது வாழ்க்கையில் நடந்த எந்தவொரு விஷயமும் நினைவில் இல்லை. பதறிப்போன அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவப் பரிசோதனையில், அதிகப்படியான உடல் அழுத்தம் காரணமாக அவருக்குத் தற்காலிக நினைவாற்றல் இழப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. சுமார் எட்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அவரது நினைவுகள் படிப்படியாகத் திரும்பின.

இருப்பினும், அந்த எட்டு மணி நேரத்தில் தனக்கு என்ன நடந்தது என்பது அவருக்குத் தெரியவில்லை. மலச்சிக்கல் போன்ற சாதாரண உடல்நலப் பிரச்சினையைக் கூட அலட்சியப்படுத்தக் கூடாது என்பதையும், அது மூளையைப் பாதிக்கும் அளவிற்குத் தீவிரமடையக்கூடும் என்பதையும் இந்தச் சம்பவம் உலகிற்கு உணர்த்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author