சென்னை –கல்யாண வீட்டு ஸ்டைல்ல சாம்பார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம் .
தேவையான பொருட்கள்;
எண்ணெய் = நான்கு ஸ்பூன்
நெய்= இரண்டு ஸ்பூன்
கடுகு =அரை ஸ்பூன்
சீரகம் =அரை ஸ்பூன்
பெருங்காயம் =அரை ஸ்பூன்
வெந்தயம்= கால் ஸ்பூன்
துவரம் பருப்பு =முக்கால் கப்
பாசிப்பருப்பு =கால் கப்
காய்கறிகள்
சின்ன வெங்காயம் =பத்து
பெரிய வெங்காயம்= ஒன்று
பூண்டு= நான்கு பள்ளு
பச்சை மிளகாய்= 2
வரமிளகாய்= 2
தக்காளி =இரண்டு
கேரட்= இரண்டு
பீன்ஸ்= நான்கு
முருங்கைக்காய்= ஒன்று
கத்தரிக்காய்= 2
உருளைக்கிழங்கு= இரண்டு
புளி =நெல்லிக்காய் சைஸ்
மசாலா தூள்
மிளகாய் தூள்= ஒரு ஸ்பூன்
சாம்பார் தூள்= மூன்று ஸ்பூன்
மஞ்சள் தூள்= அரை ஸ்பூன்
கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
செய்முறை;
ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், வெந்தயம்,பெருங்காயம் சேர்த்து தாளித்து சின்ன வெங்காயம் ,பச்சைமிளகாய் மற்றும் பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ளவும். பிறகு பூண்டை இடித்து சேர்த்துக் கொள்ளவும் . பிறகு தக்காளியை சேர்த்து வதக்கி விடவும். இப்போது எடுத்து வைத்துள்ள காய்கறிகளை நறுக்கி அதனுடன் சேர்த்து கிளறி கொள்ளவும். பிறகு தேவையான அளவு உப்பு ,மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள் சேர்த்து கலந்து விட்டு காய் மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
மற்றொருபுறம் பருப்புகளை கழுவி குக்கரில் வேகவைத்து மசித்து கொள்ளவும்.இப்போது காய் வெந்தவுடன் பருப்பை சேர்த்து கலந்து விடவும். பிறகு புளிக்கரைசலையும் ஊற்றவும் . தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம் .தாளிப்பு கரண்டியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை ,வர மிளகாய் சேர்த்து தாளித்து பருப்புடன் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும். பருப்பின் நுரை அடங்கும் வரை கொதிக்க வைத்து கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் கம கம வென கல்யாண வீட்டு சாம்பார் தயார் ஆகிவிடும்.