சீனாவின் பிரபல மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான செரெஸ் நீண்ட தூரப் பயணங்களின் போது அவசரத் தேவைகளுக்காகப் பயன்படுத்தக்கூடிய, குரல் கட்டளை மூலம் இயங்கும் கழிவறை வசதிக்கான காப்புரிமையைப் பெற்றுள்ளது.
ஹூவாய் நிறுவனத்துடன் இணைந்து ‘ஐட்டோ’ என்ற சொகுசு கார் பிராண்டை உருவாக்கி வரும் இந்நிறுவனம், முன் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கக்கூடிய வகையில் இந்த கழிவறையை வடிவமைத்துள்ளது.
ஒரு பட்டனை அழுத்தினாலோ அல்லது குரல் மூலம் உத்தரவிட்டாலோ, முன் இருக்கைக்கு அடியில் இருந்து இந்த கழிவறை தானாகவே வெளியே வரும். இதில் துர்நாற்றத்தை வெளியேற்றும் மின்விசிறி மற்றும் கழிவுகளை உலர வைக்கும் வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
டிராஃபிக் நெரிசல்கள் அல்லது கழிவறை வசதி இல்லாத நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த வினோதமான வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே செரெஸ் நிறுவனத்தின் கார்களில் மசாஜ் இருக்கைகள், மினி பிரிட்ஜ் மற்றும் சினிமா பார்க்கும் வசதிகள் உள்ள நிலையில், இப்போது இந்த நகரும் கழிவறை வசதியும் சேர்ந்துள்ளது.
Voice-controlled car toilets have been patented by Chinese company Seres pic.twitter.com/gAoVxu0Z6T
— Dexerto (@Dexerto) April 18, 2026
“>
தற்போதைக்கு இது ஒரு காப்புரிமைத் திட்டமாக மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் வெளிவரவிருக்கும் சொகுசு மின்சார கார்களில் இது இடம்பெற வாய்ப்புள்ளது.
தொழில்நுட்பம் மற்றும் வசதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கார் பிரியர்களிடையே இந்தச் செய்தி பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
