இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார்!

சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணியளவில் காலமானார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

தற்பொழுது, இயக்குனர் சுரேஷின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில், ப்ரொடக்ஷன் நம்பர் #17 யோகி பாபு வைத்து திரைப்படத்தை இயக்கிய, இன்னும் இரண்டு படங்கள் இரண்டு பெரிய நிறுவனங்களுக்கு எடுக்க இருந்த நிலையில், அவரது திடீர் மரணம் திரைத்துறையில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுரேஷ் சங்கையா மறைவை அவரது நண்பரும் ஒளிப்பதிவாளருமான ஷரண் உறுதி செய்துள்ளார். மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு அவர் படத்தின் இசை அமைப்பாளர் ரகுராம் இறந்தார். இப்போது இவர், இந்த தொடர் மறைவுகள் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இவர், கடந்த 2017-ம் ஆண்டு ‘ஒரு கிடையின் கரு மனு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கடந்த ஆண்டு ‘சத்ய சொதனை’ படத்தின் மூலம் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author