எதிர்வரும் 3 ஆண்டுகளில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கூட்டாளி நாடுகளைச் சேர்ந்த 1300 வைத்தியர்களுக்கு பாரம்பரிய சீன மருத்துவப் பயிற்சியளிக்கும் திட்டம் ஒன்றை சீனா அறிவித்துள்ளது.
சாங்சுன் நகரில் அண்மையில் நடைபெற்ற பாரம்பரிய சீன மருத்துவம் பற்றிய ஒரு மாநாட்டில், பாரம்பரிய சீன மருத்துவப் பணியகம் இத்திட்டத்தை வெளியிட்டது.
பாரம்பரிய சீன மருத்துவத்திற்கான சர்வதேச பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றாக, இந்த திட்டம் செயலுக்கு செயல்படுத்தப்படும்.
பாரம்பரிய சீன மருத்துவத்தின் சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி ஒத்துழைப்புத் திட்டம், குத்தூசி மருத்துவம், மூலிகை மருத்துவம் மற்றும் சான்றுகள் அடிப்படையிலான ஆய்வுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். பாரம்பரிய மருத்துவத்தின் அறிவியல் ஆராய்ச்சி நிலையை மேம்படுத்தும் நோக்கில், தொடர்புடைய நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து, அறிவியல் புத்தாக்கம், பரிமாற்றம், ஆராய்ச்சி முடிவுகளின் பயன்பாடு என ஒத்துழைப்புகளை மேற்கொள்வோம். வரும் 3 ஆண்டுகளில், முதற்கட்ட திட்டத்தில், 1300 பாரம்பரிய சீன மருத்துவ வைத்தியர்களுக்கு பயற்சி அளிக்கும் என்று பாரம்பரிய சீன மருத்துவப் பணியகத்தின் இயக்குநர் சுட்டிக்காட்டினார்.
பராம்பரிய சீன மருத்துவம், 196 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவியுள்ளது. சீனாவிற்கு வெளியே, 80,000 மருத்துவகங்களில் 3 லட்சத்துக்கு மேற்பட்ட மருத்துவர்கள் சேவை புரிந்து வருகின்றனர்.