சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் அண்மையில் கன்சு மாநிலத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், மேற்குப் பகுதி வளர்ச்சித் திட்டம், மஞ்சள் ஆற்றுப்பள்ளத்தாக்கின் உயிரினச்சூழல் பாதுகாப்பு, உயர் தர வளர்ச்சி ஆகியவை பற்றி சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் கொள்கையையும் பரவலையும் கன்சு மாநிலம் ஆழமாக செயல்படுத்த வேண்டும் என்றார். மேலும், புதிய வளர்ச்சிக் கருத்துக்களைப் பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், உயிரினப் பாதுகாப்பு மற்றும் சீரமைப்பை வலுப்படுத்துதல், பசுமை மற்றும் கார்பன் குறைந்த மாற்றத்தைத் துரிதப்படுத்துதல், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணியை மேலும் விரிவாக ஆழப்படுத்துதல், கிராமப்புறங்கள் பன்முகப் புத்துயிர் பெறுவதை ஊக்குவித்தல், மக்களின் வாழ்வாதார உத்தரவாதத்தை வலுப்படுத்துதல், தேசிய ஒற்றுமையை முன்னெடுத்தல் ஆகிய பணிகள் முயற்சி செய்ய வேண்டும் என்றார். அதோடு, இன்பமான அருமையான கன்சு மாநிலத்தின் கட்டுமானத்தை விரைவுபடுத்தி, சீனப் பாணி நவீனமயமாக்கத்தோடு கூடியதாக கன்சு மாநிலத்தின் அத்தியாயத்தை எழுத வேண்டும் எனவும் அவர் விருப்பம் தெரிவித்தார்.