தீக்கிரையாக்கிக் கொள்ளும் ஜப்பானிய கப்பல்கள்

ஜப்பானிய கடல் தற்காப்பு படையின் இகாசுச்சி விரைவு கப்பல் ஏப்ரல் 17ம் நாள், தைவான் நீரிணை வழியாக 14 மணி நேரமாக பயணித்தது.

131 ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் 17ம் நாள், ஆக்கிரமிப்பு போர் மூலம், சீனாவின் அப்போதைய ட்சிங் வம்ச அரசுடன் ஜப்பான், சிமோனோசெகி உடன்படிக்கையை உருவாக்கியது.

அதன்மூலம்,  சீனாவின் தைவான் மற்றும் பெங்ஹு தீவுகளை ஜப்பான் கைப்பற்றி, சீனத் தேசத்தைப் பெரிதும் துன்புறுத்தியது. அதே நாளில் ஜப்பானிய இகாசுச்சி விரைவு கப்பல், தைவான் நீரிணை வழியாகச் சென்று, வேண்டுமென்றே பதற்றத்தை உருவாக்கி, சீன மக்களின் உணர்வைப் புண்படுத்தியுள்ளது. தைவான் பிரிவினைவாதச் சக்திகளுக்கு ஆதரவளித்து, ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் தனது இராணுவ ஆற்றலை வலுப்படுத்த ஜப்பான் முயல்கிறது என்று இது காட்டுகிறது.

இகாசுக்கி விரைவு கப்பல், கடல் மற்றும் தரை மீது தாக்குதல் ஆற்றலைக் கொள்கிறது. வழக்கமான பயண நேரத்தைத் தாண்டியச் செயல், இப்பயணம் சாதாரணப் பயணமாக நிச்சயம் அல்ல என்பதைக் காண்பித்துள்ளது.

2வது உலகப் போருக்குப் பிந்தைய வாக்குறுதியை ஜப்பான் மீறி, சீன-ஜப்பான் உறவின் அரசியல் அடிப்படையை அச்சுறுத்தி, புதிய இராணுவ வெறியை முன்னெடுக்கும் ஆத்திரமூட்டல் இது ஆகும்.

இது குறித்து சீனப் படைகள் சட்டபடி செயல்பட்டுள்ளது. ஜப்பானுக்கு கடும் எதிர்ப்பு மற்றும் கண்டனத்தை சீனா தெரிவித்துள்ளது. பிராந்திய அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிக்காக்க சீனா, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளத் தயாராக உள்ளது. தைவான் நீரிணையில் பதற்றத்தை உருவாக்குவதன் மூலம், ஜப்பான் தன்னைத் தானே தீக்கிரையாக்கிக் கொள்ளும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

Please follow and like us:

You May Also Like

More From Author