சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ செப்டம்பர் 25ஆம் நாள் நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் “அமைதிக்காக தலைமை ஆற்றலை வெளிப்படுத்துவது” என்னும் பாதுகாப்பவையின் உயர் நிலை கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அவர் கூறுகையில், அமைதியானது, மனித சமூகத்தின் ஆவலான எதிர்பார்ப்பு ஆகும். அமைதிக்காக சரியான பாதுகாப்பு கண்ணோட்டத்தைப் பின்பற்றி, சர்வதேச நேர்மை மற்றும் நீதியில் ஊன்றி நின்று, அரசியல் மற்றும் தூதாண்மை வழிகள் மூலம் தீர்வு முறையை நாடி, தொடர்ச்சியான கூட்டு வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் கூறுகையில், எதார்த்தமான நடவடிக்கை மூலம் உலக அமைதியைப் பேணிகாக்க சீனா பங்காற்றி வருகிறது. இவ்வாண்டு பஞ்ச சீல கோட்பாடுகள் வெளியிடப்பட்டதன் 70வது ஆண்டு நிறைவாகும். பல்வேறு நாடுகளுடன் இணைந்து, பஞ்ச சீல கோட்பாடுகளின் எழுச்சியைப் பரவல் செய்து, நீண்டகால அமைதியையும் பொது பாதுகாப்பையும் கொண்டுள்ள அருமையான உலகத்தைக் கூட்டாக கட்டியமைக்க சீனா விரும்புவதாக தெரிவித்தார்.