மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றத்தைத் தணிக்கும் ஒரு முக்கிய முயற்சியாக, இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதிபர் டிரம்ப் தலைமையில் ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், இஸ்ரேல் தூதர் யெச்சியேல் லெய்டர் மற்றும் லெபனான் தூதர் நாடா மோவாட் ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்களுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
3 வாரங்களுக்கு இஸ்ரேல் – லெபனான் போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப் அறிவித்தார்
