மே 2, 3 தேதிகளில் மருத்துவ மாணவர்களுக்கு விடுமுறை கிடையாது..!

Estimated read time 1 min read

நாடு முழுதும் மே 3ம் தேதி இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடக்க உள்ளது. இதில், 26 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். கடந்த, 2024ல் நடந்த நீட் தேர்வின்போது, மருத்துவ கல்லுாரி மாணவர்கள் சிலர், உண்மையான தேர்வர்களுக்கு பதிலாக முறைகேடாக தேர்வு எழுதியதாக புகார் எழுந்தது. அவ்வறான குற்றச்சாட்டில், பீஹார், ராஜஸ்தான், ஜார்க்கண்டில், ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், ஏற்கனவே மருத்துவ இடங்கள் பெற்றவர்கள், மீண்டும் நீட் தேர்வு எழுதி, கலந்தாய்வில் வேறு கல்லுாரிகளில் இடங்கள் பெறுவதாகவும் கண்டறியப் பட்டது. இத்தகைய முறைகேடுகளை தவிர்க்க, அனைத்து மருத்துவ கல்லுாரிகளுக்கும் தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அதில், ‘மே 2, 3ம் தேதிகளில் மருத்துவ மாணவர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டாம். அத்தியாவசியக் காரணங்கள் இருந்தால் மட்டும் விலக்கு அளிக்கலாம் என, அறிவுறுத்தி உள்ளது. title

You May Also Like

More From Author