தேனி மாவட்டம் கம்பம் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் கம்பத்தில் இருந்து கூடலூர், லோயர் கேம்ப் வழியாக குமுளிக்கும், காமயகவுண்டன்பட்டி, இராயப்பன்பட்டி, கோகிலாபுரம் வழியாக உத்தமபாளையத்திற்கும் பெண்களுக்கு கட்டணம் இல்லா புதிய டவுன் பஸ் சேவையை சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கம்பத்தில் இருந்து பெண்களுக்கு கட்டணம் இல்லா புதிய டவுன் பஸ் சேவை
