பாஜக-வுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை! – தேவையற்ற முறையில் இணைப்பதா? – மத்திய மந்திரி எல்.முருகன் காட்டம்..!! 

Estimated read time 1 min read

தமிழக அரசியலில் தவெக ஆட்சி அமைக்க மேற்கொள்ளும் அதிரடி முயற்சிகளுக்கும், அதிமுக-வில் ஏற்பட்டுள்ள சலசலப்புகளுக்கும் பின்னால் பாஜக இருப்பதாக எழுந்துள்ள புகார்களுக்கு மத்திய மந்திரி எல்.முருகன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழலுக்கும் பாஜகவிற்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஏற்கனவே தெளிவான விளக்கத்தை அளித்துவிட்டதைச் சுட்டிக்காட்டிய எல்.முருகன், எதற்கெடுத்தாலும் பாஜக-வை வம்புக்கு இழுப்பது முறையல்ல என்றும், தேவையற்ற முறையில் தங்கள் கட்சியை இந்த விவகாரத்தில் இணைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் காட்டமாகத் தெரிவித்தார்.

விஜய்யின் அரசியல் நகர்வுகள் மற்றும் அதிமுக-வின் உட்கட்சிப் பூசல்களுக்கு இடையே பாஜக-வின் பெயர் அடிபடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்பதே அவரது பேட்டியின் சாராம்சமாக உள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author