தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், வரும் நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வடகடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஜேமசந்திரன் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பொழியக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பலத்த மழையின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என்று பிரபலமான வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் நவம்பர் 14ஆம் தேதியே சூசகமான தகவலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
