வளைகுடா நாடுகளில் நிலவி வரும் அசாதாரண சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி மற்றும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க மக்கள் தியாகம் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி விடுத்த கோரிக்கையை, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
தெலங்கானாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, உலக அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயுவின் விலை அதிகரித்து வருவதால், நாட்டின் அந்நியச் செலவாணியைப் பாதுகாக்க மக்கள் சில கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதன்படி தனியார் வாகனங்களைத் தவிர்த்து மெட்ரோ மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள். அவசியமில்லாத வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்கவும். அடுத்த ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்குவதைத் தள்ளிப்போடுங்கள். மீண்டும் ‘வீட்டிலிருந்தே வேலை’ (Work From Home) முறையைச் செயல்படுத்துங்கள். சமையல் எண்ணெய் மற்றும் உரங்களின் பயன்பாட்டில் சிக்கனம் தேவை போன்றவைகளாகும்.
मोदी जी ने कल जनता से त्याग मांगे – सोना मत ख़रीदो, विदेश मत जाओ, पेट्रोल कम जलाओ, खाद और खाने का तेल कम करो, मेट्रो में चलो, घर से काम करो।
ये उपदेश नहीं – ये नाकामी के सबूत हैं।
12 साल में देश को इस मुक़ाम पर ला दिया है कि जनता को बताना पड़ रहा है – क्या ख़रीदे, क्या न…
— Rahul Gandhi (@RahulGandhi) May 11, 2026
பிரதமரின் இந்தப் பேச்சுக்கு ‘எக்ஸ்’ தளத்தில் பதிலடி கொடுத்துள்ள ராகுல் காந்தி, “கடந்த 12 ஆண்டுகளில் நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியதுதான் உங்கள் சாதனையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
“மக்கள் எதை வாங்க வேண்டும், எங்கே போக வேண்டும் என்று பிரதமர் உத்தரவிடும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. இது உபதேசம் அல்ல, ஆட்சியின் தோல்விக்கான அத்தாட்சி. ஒவ்வொரு முறையும் பொறுப்பை மக்கள் மீது சுமத்திவிட்டு, பிரதமர் தனது தோல்வியிலிருந்து தப்பிக்கப் பார்க்கிறார். சமரசம் செய்துகொள்ளும் ஒரு பிரதமரால் நாட்டை வழிநடத்த முடியாது,” என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
