தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று (ஜனவரி 7) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும் என IMD கணித்துள்ளது.
“வங்காள விரிகுடாவில் நன்கு குறிக்கப்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக குவிந்துள்ளது; அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது” என அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
