சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, 22ஆம் நாள், ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் 11ஆவது சீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பிறகு, அந்த இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் இணைந்து செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
வாங் யீ கூறுகையில்,
9ஆவது சீன-ஜப்பான்-தென்கொரிய தலைவர்களின் கூட்டத்துக்குப் பிறகு, மூன்று நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புகள் எட்டியுள்ள முன்னேற்றங்களை மூன்று நாடுகள் உயர்வாக பாராட்டின. சிக்கலான சர்வதேச நிலைமையிலும், உலக பொருளாதாரம் மீட்சியடையும் மோசமான நிலைமையிலும் மூன்று நாடுகள், பரிமாற்றங்களை வலுப்படுத்தி, ஒன்றுக்கு ஒன்று நம்பிக்கையை அதிகரித்து, ஒத்துழைப்புகளை ஆழமாக்க வேண்டும் என்றார்.
ஜப்பான் மற்றும் தென்கொரியாவுடன் இணைந்து புதிய நிலைமையில், மூன்று நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புகளின் தரத்தை உயர்த்த சீனா விரும்புகின்றது என்று வாங் யீ தெரிவித்தார்.
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                







 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                