நடப்பு அமெரிக்க அரசு ஆட்சிக்கு வந்த ஓராண்டு நிறைவை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் 5 மொழிகளில் பொது மக்கள் கருத்துக் கணிப்பை வெளியிட்டது. 24 மணி நேரத்தில் 16990 பேர் இதில் பங்கெடுத்து கருத்துக்களை வெளியிட்டனர்.
இந்தக் கருத்துக் கணிப்பின்படி, 84 விழுக்காட்டினர் நடப்பு அமெரிக்க அரசின் ஆளும் திறனுக்குப் பெரும் மனநிறைவின்மை தெரிவித்தனர். “அமெரிக்காவுக்கே முன்னுரிமை” என்ற தூதாண்மை கொள்கைக்கு, 86.2 விழுக்காட்டினர் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், கடந்த ஓராண்டில், பல சர்வதேச விவகாரங்களில் அமெரிக்கா மோசமாகச் செயல்பட்டது என்று 89.6 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.
