பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்று தொடர்ந்து சாதனை படைத்தன. ஆரம்ப வர்த்தகத்தில் முதன்முறையாக BSE சென்செக்ஸ் வரலாற்றுச் சிறப்புமிக்க 75,000 புள்ளிகளை தாண்டியது. நிஃப்டி புதிய சாதனை உச்சத்தை எட்டியுள்ளது.
அதிகமானோர் ஆரம்ப வர்த்தகத்தில் ஐடி பங்குகளை வாங்கியது சந்தைகளின் ஏற்றத்திற்கு அதிக பங்களித்தது.
30-பங்குகள் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 381.78 புள்ளிகள் உயர்ந்து இது வரை எட்டாத உயரமான 75,124.28 புள்ளிகளை எட்டியது.
NSE நிஃப்டி 99 புள்ளிகள் முன்னேறி 22,765.30 என்ற சாதனையை எட்டியது.
சென்செக்ஸில் இருந்து, இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், எச்.சி.எல் டெக்னாலஜிஸ், டாடா மோட்டார்ஸ், விப்ரோ, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி மற்றும் நெஸ்லே ஆகியவை அதிக லாபம் ஈட்டின.