சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் சந்திப்பு பற்றிய அறிமுகம்

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் அழைப்பை ஏற்று, அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் 13 முதல் 15ஆம் நாள் வரை சீனாவில் பயணம் மேற்கொண்டார்.

இது குறித்து விரிவான நிலைமையைச் சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ அறிமுகம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில்,

சீன-அமெரிக்க ஆக்கப்பூர்வமான உத்திநோக்கு நிலைத்தன்மையுடைய உறவை இரு நாட்டுறவின் புதிய நிலைப்பாடாக கொள்ள இரு நாட்டு அரசுத் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். அடுத்த 3 ஆண்டுகள் அல்லது நீண்டகாலத்திற்கான இரு நாட்டுறவுக்கு இது வழிகாட்டியது என்றார்.

அவர் மேலும் கூறுகையில்,

இச்சந்திப்பில், தைவான் பிரச்சினை, முக்கியமாக விவாதிக்கப்பட்டது. சீனாவின் நிலைப்பாடு தெளிவானது. முதலில், தைவான் பிரச்சினை, சீனாவின் உள் விவகாரமாகும். இரண்டாவது, தைவான் பிரச்சினை சீன-அமெரிக்க உறவில் முக்கியமான அம்சமாகும். இதைச் சீராக சமாளித்தால், இரு நாட்டுறவு நிதானமானது. சீராக சமாளிக்காவிடில், இரு நாடுகளுக்கிடையில் மோதல் ஏற்படும். மூன்றாவது, தைவான் நீரிணையின் அமைதியைப் பேணிக்காப்பது இரு தரப்புகளுக்கிடையிலுள்ள அடிப்படை பொது கருத்தாக இருக்க வேண்டும் என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author