உதகை அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியைக் கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் குவிந்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 128வது மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. தமிழ்நாடு வரைபடம், திருவள்ளுவர் சிலை, சென்னை சென்ட்ரல், மலை ரயில் , தோடர் பழங்குடியினர்களின் வீடு உள்ளிட்ட பல்வேறு மலர் வடிவங்கள் சுற்றலாப் பயணிகளை கவர்ந்துள்ளன.
பூங்கா முழுவதும் 50 ஆயிரம் பூந்தொட்டிகளில், 275 வகையான பல வண்ண மலர்கள் மாடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கண்களுக்கு விருந்தளிக்கும் இந்த மலர் கண்காட்சியை காண அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
