இன்று வெளியாகிறது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு!

Estimated read time 1 min read

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகின்றது.

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 11ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சம் மாணவ, மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் எழுதினர்.

தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவுற்ற நிலையில், இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன.

மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பயன்படுத்தி www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in என்ற இணையதளத்தில் வாயிலாக முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும், வாட்ஸ்அப் எண் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் பள்ளிகளில் பதிவு செய்திருந்த கைபேசி எண்களுக்கு மெசேஜ் வழியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளுக்கு நேரில் சென்றும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

You May Also Like

More From Author