பிரதமரின் அழைப்பை ஏற்று அதிரடி: ஓராண்டிற்கு தங்கம் வாங்க மாட்டோம் – மத்திய அரசு ஊழியர்கள் முடிவு..!

Estimated read time 0 min read

மேற்காசிய போர் காரணமாக உலகளாவிய வினியோக தொடரில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், நாட்டின் இறக்குமதி செலவு அதிகரித்து வருகிறது. எனவே அன்னிய செலாவணியை பாதுகாக்கும் நோக்கில் பெட்ரோல், டீசல் நுகர்வைக் குறைத்தல், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரித்தல் மற்றும் வீட்டிலிருந்தே பணியாற்றுதல் போன்ற சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.

அன்னிய செலாவணியில் அதிகம் தங்கம் இறக்குமதிக்கே செல்வதால், தங்கம் வாங்குவதை குறைக்க வலியுறுத்தினார். பிரதமரின் கோரிக்கையை ஏற்று செயல்படுத்தும் வகையில், மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அதிகாரிகள் ஓராண்டிற்கு தங்கம் வாங்குவதில்லை என முடிவு செய்தனர்.

மேலும், சுழற்சி முறையில் 20 சதவீத ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி; ஒரே வாகனத்தில் அதிகாரிகள் பயணம்; வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை கூட்டம் ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

You May Also Like

More From Author