உலக மற்றும் சீனாவின் 10 முக்கியச் செய்திகளைச் சீன ஊடகக் குழுமம்(சிஎம்ஜி) தெரிவு செய்து 28ஆம் நாள் வெளியிட்டது.
அவற்றில் , தேசிய பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான 15ஆவது ஐந்தாண்டு திட்டத்துக்கான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் ஆலோசனைகள் சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 4வது முழு அமர்வில் பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்படுவது, ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போர் மற்றும் உலக பாசிச எதிர்ப்புப் போரின் 80ஆவது ஆண்டு நிறைவுக்கான நினைவு மாநாடு நடைபெறுவது, சீனக்கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களிடையில் 8 அம்ச சிக்கன ஒழுங்குமுறை விதிகள் பற்றி கற்றுக்கொண்டு பன்முகங்களிலும் செயல்படுத்துவதன் மூலம் கட்சியின் பணி முறை இடைவிடாமல் சீராகி வருவது ஆகியவை 2025ம் ஆண்டு சீனாவின் 10 முக்கியச் செய்திகளில் முதல் 3 இடங்களில் வகிக்கின்றன.
உலக 10 முக்கிய செய்திகளில்
சீன அரசுத் தலைவரின் தூதாண்மை நடவடிக்கைகள் உலக அமைதி மற்றும் வளர்ச்சி ஓட்டத்தில் தலைமை பங்கு வகிப்பதுடன் ஷி ச்சின்பிங் வழங்கிய உலக ஆட்சி முறை உள்ளிட்ட 4 முன்மொழிவுகளும் மனித குலத்தின் பொது எதிர்காலத்தின் கட்டுமானத்தை விரைவுப்படுத்தியுள்ளன.
பல உலக நாடுகள் 2ஆவது உலகப் போரில் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடின.
இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானின் மீது ராணுவத் தாக்குதல் தொடுத்தன. காசா பிரதேசத்தில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது ஆகியவை முன்னிலையில் உள்ளன.
