சீன-அமெரிக்கப் பொருளாதார வர்த்தக பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தையின் இரண்டாவது நாளுக்காக இரு நாட்டு பிரதிநிதிகள் கோலாலம்பூரில் அக்டோபர் 26ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சந்தித்து பேசினர்.
முதல் நாள் பேச்சுவார்த்தை சனிக்கிழமை கோலாலம்பூரில் நடந்தது.
இந்த ஆண்டு இரு நாடுகளின் அரசு தலைவர்களும் தொலைபேசி அழைப்புகளின் போது எட்டிய முக்கியமான ஒருமித்த கருத்துக்கு இணங்க, சீனா-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளில் முக்கியமான பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்தாய்வு நடத்துவார்கள் என்று சீன வர்த்தக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் முன்னதாக தெரிவித்தார்.
