ஷி ச்சொங்ஷியுன் என்பவர், விவசாய பகுதியிலிருந்து வந்த பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர் ஆவார். அவர் பொது மக்களின் மீது ஆழமான உணர்ச்சியை கொண்டுள்ளார். ஷிச்சொங்ஷியுனின் குணாதசியம், அவரது மகன் ஷி ச்சின்பிங்குக்கு ஆழமாகப் செல்வாக்கு விளைவித்தது. அதனால், ஷி ச்சின்பிங், கம்யூனிஸ்ட் இலட்சியத்தில் பங்காற்றி, பொது மக்களுக்கும் தேசத்திற்கும் சேவை புரிந்து வருகின்றார்.
இனிமையான வாழ்க்கையின் மீது பொது மக்களின் மோகம், எங்களுடைய பணி இலக்காகும் என்று 2012ஆம் ஆண்டு நவம்பர் திங்களில், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷி ச்சின்பிங் செய்தியாளர்களைச் சந்தித்த போது தெரிவித்தார்.
பொது மக்களுக்குச் சேவை புரிவது என்னுடைய பணியாகும். கடினமான பணி , ஆனால் மகிழ்ச்சியானது என்று ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.