ஷென்சோ-23 வின்கலத்தை வெற்றிகரமாக ஏவியது சீனா

Estimated read time 1 min read

சீன விண்வெளி நிலையத்திற்கு 3 விண்வெளி வீரர்களை அனுப்பும் விதமாக, சீனா 24ஆம் நாள் இரவில் ஷென்சோ-23 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது.

25ஆம் நாள் அதிகாலையில், ஷென்சோ-23 விண்கலம், தியான்கோங் எனும் விண்வெளி நிலையத்துடன் விரைவாகவும் தன்னியக்கமாகவும்  இணைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஷென்சோ-23 மற்றும் ஷென்சோ-21  குழுக்களைச் சேர்ந்த மொத்த 6 விண்வெளி வீரர்கள் சந்தித்து, குழுப் புகைப்படம் எடுத்துள்ளனர். இது, சீன விண்வெளி நிலையத்தில் 8வது சந்திப்பாகும்.

ஷென்சோ-21 குழுவினர்களிடமிருந்து கடமைகளை ஷென்சோ-23 குழுவினர்கள் ஏற்றுக்கொள்வார்கள். மேலும், அவர்களில் ஒருவர், ஓர் ஆண்டுகாலமாக தங்குவார். இந்த தங்கும் கால வரம்பு, முந்தைய ஷென்சோ பயணங்களின் வழக்கமான கால அளவை விட ஒரு மடங்கு  அதிகம்.

விண்வெளி வீரரான லாய் ஜியா-யிங் அம்மையார், சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தைச் சேர்ந்த முதல் விண்வெளி வீரரும் ஆவார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author