சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை செயலாளர் ஜோர்ச்கியேவா அம்மையார் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்பு பேட்டி அளித்து, சீனாவின் வளர்ச்சிக்கு அடையாளம் காட்டுவது, முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்றும், சீனாவின் வெற்றி, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதோடு, அனைவரும் வளர்ச்சி சாதனைகளை கூட்டாக அனுப்பவிக்கவும் வைக்கிறது என்றும் தெரிவித்தார்.
இடைக்கால மற்றும் நீண்டகால இலக்குகளை வகுப்பது, அடிப்படை வசதிகளின் கட்டுமானத்தில் ஒதுக்கீடு செய்வது, திறமைசாலிகளின் வளர்ச்சியை முன்னெடுப்பது, சட்ட ஒழுங்கை மேம்படுத்துவது, போட்டியாற்றலை உயர்த்துவது ஆகியவை சீனாவிலிருந்து பெற்று பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய அனுபவங்களாகும். இவற்றின் மூலம் வாய்ப்புகளை உருவாக்கி, மக்களின் உள்ளார்ந்த ஆற்றலை வெளிக்கொணர முடியும். தற்போது சீனா, உயர் வேக வளர்ச்சியிலிருந்து உயர் தர வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று ஜோர்ச்கியேவா பேட்டியில் தெரிவித்தார்.
