ஈரானில் மீண்டும் இணைய சேவை: 87 நாட்களாக இன்டர்நெட் இல்லாமல் தவித்த மக்கள்  

Estimated read time 1 min read

நவீன டிஜிட்டல் உலகில் சமூக ஊடகங்கள் மற்றும் இணையம் இல்லாமல் ஒரு நாள் கூட நம்மால் வாழ முடியாது.
ஆனால், மேற்கு ஆசியப் போர்ச் சூழல் காரணமாக கடந்த 87 நாட்களாக முழுமையான இணைய முடக்கத்தைச் சந்தித்து வந்த ஈரான் நாட்டு மக்களுக்கு தற்போது ஒரு முக்கிய விடிவுகாலம் பிறந்துள்ளது.
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சகத்திற்கு ஒரு முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, கடந்த ஜனவரி மாதத்திற்கு முன்பு இருந்ததை போல சர்வதேச இணைய சேவைகளை (International Internet Access) உடனடியாக பழைய நிலைக்கு கொண்டு வர அவர் ஆணையிட்டுள்ளார்.
அமெரிக்காவுடன் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author