இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மார்ச் 23

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.

22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,185க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.49,480ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 6,747ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.53,976ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ரூ.80.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

You May Also Like

More From Author