சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும், எகிப்து அரசுத் தலைவர் சேசியும் மே 30ஆம் நாள் ஒருவருக்கு ஒருவர் செய்தி அனுப்பி, இரு நாட்டு தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
அப்போது ஷி ச்சின்பிங் கூறுகையில்,
சீனாவுடன் மிக முன்னதாக தூதாண்மையுறவு நிறுவிய அரபு நாடாகவும் ஆப்பிரிக்க நாடாகவும் எகிப்து திகழ்கின்றது. கடந்த 70 ஆண்டுகளில், சர்வதேச மற்றும் பிரதேச நிலைமை எவ்வாறு மாற்றினாலும், இரு நாடுகள் ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளித்து நம்பிக்கை கொடுப்பதுடன் ஒத்துழைப்பு அளித்து வருகின்றன. சீன-எகிப்து உறவு, புதிய யுகத்தில் பொது எதிர்கால சமூகத்தை நோக்கி வளர்கின்றது. இரு நாட்டுறவில் நான் உயர்வாக கவனம் செலுத்துகின்றேன். சேசியுடன் இணைந்து, தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 70 ஆவது ஆண்டு நிறைவை தொடக்கமாக கொண்டு, நட்புறவைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, இரு நாட்டு மக்களுக்கு நன்மை அளித்து, சர்வதேச மற்றும் பிரதேச அமைதிக்கு பங்காற்ற விரும்புகிறேன் என்றார்.
