சீன-கனடா வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

Estimated read time 1 min read

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ மே 29ஆம் நாள் ஒட்டாவாவில் கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது வாங்யீ கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில் சீன-கனடா உறவில் பின்னடைவு ஏற்பட்டாலும், இரு நாட்டுத் தலைவர்களின் நெடுநோக்கு வழிக்காட்டலில் இரு நாட்டுறவு மீண்டும் வளரத் தொடங்கியுள்ளது. பல்வேறு துறைகளிலுள்ள பரிமாற்றமும் ஒத்துழைப்பும் பன்முகங்களிலும் மீட்சியடைந்துள்ளன. இவ்வாண்டின் ஜனவரியில், கனடா தலைமை அமைச்சர் கார்னி சீனாவில் வெற்றிகரமாகப் பயணம் மேற்கொண்டார். சீன-கனடா புதிய ரக நெடுநோக்குக் கூட்டாளியுறவின் கட்டுமானத்தை முன்னேற்ற இரு நாட்டுத் தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். கனடாவுடன் இணைந்து இரு நாட்டுத் தலைவர்களின் முக்கிய பொது கருத்துக்களை நடைமுறைப்படுத்தி இரு நாட்டுறவு ஆரோக்கியமான நிதானமான மற்றும் தொடரவல்ல பாதையில் செல்வதை உறுதிப்படுத்தச் சீனா எதிர்பார்ப்பதாக வாங்யீ கூறினார்.

You May Also Like

More From Author